கையில் பணம் தங்காமல் விரயம் ஆகிறதா..? இந்த ஓட்டைகளை சரி பண்ணுங்க..!

கையில் பணம் தங்காமல் விரயம் ஆகிறதா..? இந்த ஓட்டைகளை சரி பண்ணுங்க..!

  • Finance
  • September 12, 2023
  • No Comment
  • 16

“இன்றைய நிலையில், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மனிதர்கள் செய்யும் செலவு கொஞ்சமல்ல. இந்தச் செலவுகளைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பட்டியல் போட்டு, இவற்றுக்கெல்லாம் ஒரு பெரிய நோ சொன்னாலே போதும், உங்கள் கையில் காசில்லை என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது” என்று சொன்னபடி, இன்றைக்கு நம்மில் பலரும் செய்யும் அநாவசிய செலவுகளைப் பட்டியல் போடுகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன். அந்தப் பட்டியல் இனி…

இன்று பெரும்பாலான வீடுகளில் ஆண்-பெண் என இருவரும் வேலைக்குச் செல்வதால், சமையல்காரர்களைப் பணிக்கு அமர்த்துகின்றனர். என்னதான் சமையல்காரர்கள் இருந்தாலும் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும் குறையவில்லை.

இப்போது ஆடைகள் வாங்கிக் குவிப்பது புது பேஷன் ஆகிவிட்டது என்றே கூறலாம். மாதம் ஓர் ஆடை, ஆடி தள்ளுபடியில் ஓர் ஆடை, ஆன்லைன் ஸ்டோரில் ஓர் ஆடை என ஆடைகள் வாங்கிக் குவித்து, புது ஆடைக்காகவே தினம் ஒரு விழா அல்லது திருநாளை உருவாக்கிக் கொண்டிருக்கோம்.

எப்போதுமே திரைப்படத்துக்கு எனத் தனி மவுசு உண்டு. புதுப் படங்கள், வெப் சீரிஸ் ஆகிய அனைத்தையும் பார்க்க அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவற்றை சப்ஸ்கிரைப் செய்துவிடுகிறோம். இருந்தும் `தியேட்டர் ஃபீல் வேணும்’ என்று பாப்கார்னுடன் தியேட்டருக்குப் படை எடுக்கிறோம்.

`டாக்டர் தினமும் வாக்கிங் போகச் சொல்லி இருக்காரு’, `உடம்பை ஃபிட்டா வெச்சுக்க தினமும் வாக்கிங் போறேன்’ என்று சொல்லிக்கொண்டு, வாக்கிங் போகவே காரில் செல்கிறோம். எதற்கு இந்த வீண்செலவு?

யோகா, ஜிம், பாட்டு கிளாஸ் எனப் பல கிளாஸ்களில் சேர்ந்து காசு கட்டிவிட்டு, `கிளாஸ் போகவே டைம் இல்ல’, `ஒரு கிளாஸ் போனா, இன்னொரு கிளாஸ் போக முடியறது இல்ல’ என்று புலம்புகிறோமே!

தியேட்டர், பீச் போன்ற இடங்களுக்குச் சென்று வயிறு நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிறகும், சம்பிரதாயம் போல கட்டாயம் ஹோட்டலுக்குச் சென்றுகொண்டிருக்கோம்.

`வாங்குவேன்… யூஸ் பண்ணுவேன்… ரிப்பீட்டு’ என்பது போல பலர் ஆறு மாதத்துக்கு ஒரு முறை மொபைல் போனை மாத்திக்கொண்டிருக்கிறோம். ஏன்?

வீட்டில் கார், பைக் இருந்தாலும் ஓலா, ஊபர் பயன்படுத்திக்கொண்டேதான் இருக்கிறோம்.

இது மாதிரி செய்யும் செலவுகளுக்கெல்லாம் ஒரு `No’ சொன்னால் நாம் நிறைய சேமிப்போம்” என்று முடித்தார் சுந்தரி ஜகதீசன்.

கையில் காசு தங்கலையே என்று கவலைப்படுகிறவர்கள் இந்த விஷயங்களை நிச்சயம் கவனிக்கலாம்!

Related post

மாஸ்டர்கார்டு மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இணைந்து நகருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன

மாஸ்டர்கார்டு மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இணைந்து நகருக்கான…

மாஸ்டர்கார்டு மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியன ஏற்றுமதியை மையமாகக் கொண்ட, பல சேவைகளை மையமாகக் கொண்ட விசேட பொருளாதார வலயமான கொழும்பு துறைமுக நகரத்தை…
இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான மத்திய வங்கியின் அறிவித்தல்!

இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான மத்திய வங்கியின் அறிவித்தல்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இன்றையதினம்(12) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய வங்கியின் தகவலின் படி இன்றையதினம், தங்கம் அவுன்ஸ் விலை  619,557 ரூபாவாக பதிவாகியுள்ளது.…
வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2023 யூலை

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2023 யூலை

யூலையுடன் ஒப்பிடுகையில் 2023 யூலையில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. இருப்பினும், 2023 சனவரி தொடக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *