இலங்கையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ள லைகா

இலங்கையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ள லைகா

  • Cinema
  • September 11, 2023
  • No Comment
  • 54

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வாழ்க்கையை படமாக்க லைகா நிறுவனம் முடிவு.

இந்திய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ள லைகா நிறுவனம், தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அங்குரார்பண நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திர நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக கடந்த வியாழன் அன்று நடைபெற்றது.

நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்ட மேடையில், பிரமாண்டமான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்விற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வருகை தந்திருந்தனர்.

இலங்கையில் தனது திரைப்பட தயாரிப்புகளை ஆரம்பித்துள்ள லைகா நிறுவனம், ஆரம்பகட்டமாக 6 திரைப்படங்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

இதில் 5 சிங்கள திரைப்படங்களும், ஒரு தமிழ் திரைப்படமும் தயாரிக்கப்பட உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திரைப்படங்களில் முதலாவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்கவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் திரைப்படத்தை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்துக்கு “மலி யார்கர் கிங்” என பெயர் வைக்கப் பட்டுள்ளது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply