ஆசிய கோப்பை 2023: பங்களாதேஷை வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசிய கோப்பை 2023: பங்களாதேஷை வீழ்த்திய பாகிஸ்தான்

  • Sports
  • September 7, 2023
  • No Comment
  • 76

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தானும் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. நாணயசுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஷகிபுல் ஹசன் 57 பந்துகளில் 53 ரன்களும், முஸ்பிகுர் ரஹீம் 64 ரன்களிலும் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணியின் சரிவு மீண்டும் தொடங்கியது.

இதனையடுத்து 38.4 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 193 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஹரிஷ் ரவுப் ஆறு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். நசிம் ஷா மூன்று விக்கெட்டுகளையும் ஆப்ரிடி ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இமாம் உல் ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இமாம் எல் ஹக் 84 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். இறுதியாக முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 வக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது.

Related post

19  வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் –  இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் – இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…

Leave a Reply