தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ரணில் வெல்வது உறுதி – ஹரின் பதிலடி

தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ரணில் வெல்வது உறுதி – ஹரின் பதிலடி

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 55

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றெழுத்து கொண்ட ராஜபக்ச உறுப்பினரோ அல்லது சஜித் பிரேமதாஸவோ அல்லது டலஸ் அழகப்பெருமவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ களமிறங்கினாலும் ரணில் விக்ரமசிங்க வெல்வது உறுதி அவரை எவராலும் தோற்கடிக்க முடியாது என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து மொட்டுக் கட்சியில் ஒரு தரப்பினர் பித்தலாட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி வன்முறையைத் தூண்ட முயல்கின்றனர். அவர்களின் இந்தப் பித்தலாட்டம் – வெறித்தனங்கள் இங்கு எடுபடாது.ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளில் பெரும்பாலான உறுப்பினர்களும் நிற்கின்றனர். அதைவிட தமிழ், முஸ்லிம் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ரணிலையே ஆதரிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் இதன் உண்மை நிலவரம் பகிரங்கமாகத் தெரியவரும். இப்போது வாய்ச்சவிடால் விடுபவர்கள் அப்போது மௌனமாகி விடுவார்கள்.

படுகுழியிலிருந்து இலங்கையை மீட்டெடுத்து வரும் ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென நாட்டு மக்கள் விரும்பும்போது அதற்குச் சவாலாகத் தேர்தலில் எவர் களமிறங்கினாலும் அவர்கள் தோற்பது உறுதி. ரணிலை எவராலும் தோற்கடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply