இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்லவுள்ள பெண் ரோபோ

இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்லவுள்ள பெண் ரோபோ

  • world
  • August 28, 2023
  • No Comment
  • 81

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக இந்தியா பெண் ரோபோவான ‘வியோமித்ரா’ அனுப்பப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று(26.08.2023)தெரிவித்துள்ளார்.

அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஒரு சோதனை விண்வெளிப் பயணம் முயற்சி செய்யப்படும்.

இதன் பின்னர் இரண்டாவது முயற்சியில் பெண் ரோபோ ‘வியோமித்ரா’ விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று இந்திய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

சோதனைப் பயணம்
கோவிட் தொற்றுநோய் காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது.

மேலும், அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பயணம் திட்டமிடப்படுகிறது.விண்வெளி வீரர்களை அனுப்புவது போலவே அவர்களைத் திரும்பக் கொண்டுவருவதும் முக்கியமாகும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்காகவே பெண் ரோபாவான வியோமித்ரா அனுப்பப்படுவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply