இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க கடற்படையினர் பலி

இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க கடற்படையினர் பலி

  • world
  • August 28, 2023
  • No Comment
  • 76

அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 பேரின் நிலைமை கவலைக்கிடம்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளின் பங்களிப்புடன் இந்த இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் திவி தீவுகளை அண்மித்த பகுதியில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தினர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற குறித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், விபத்தில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply