ரஷ்யா – உக்ரைன் மோதலை தீவிரப்படுத்தும் நேட்டோ அமைப்பு !

ரஷ்யா – உக்ரைன் மோதலை தீவிரப்படுத்தும் நேட்டோ அமைப்பு !

  • world
  • August 28, 2023
  • No Comment
  • 77

ரஷ்யா – உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் போர்களை நேட்டோ நடத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன்போது போர் வேண்டாம், அமைதியே வேண்டும், ஆயுதங்கள் அமைதியை தராது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றுள்ளனர்.லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நேட்டோ போர் நடத்தியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி அந்நாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர்கள், உக்ரைனுக்கு ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார பாதிப்பு, பணவீக்கம் என ஜெர்மனி பிரச்சனைகள் உள்ள நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுத உதவி வழங்கி வருவதை போராட்டக்காரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply