வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால்…! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர் வெளியிட்ட அறிவிப்பு

வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால்…! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர் வெளியிட்ட அறிவிப்பு

  • world
  • August 28, 2023
  • No Comment
  • 11

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

தற்போது இந்த வரிசையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கணிப்பு முடிவுகள்
இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் ட்ரம்புக்கு எதிராக அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கிஹாலே, விவேக் ராமசாமி உட்பட பலரும் களமிறங்கி குடியரசு கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரசாரத்தில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால் டிரம்புடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். இதன்போது, “ட்ரம்புடன் துணை ஜனாதிபதியாக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சியா?” என விவேக் ராமசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அவர் “இது என்னைப் பற்றியது அல்ல. இது நமது நாட்டைப் புதுப்பித்தல் பற்றியது, நமது இயக்கத்தின் தலைவராகவும், முகமாகவும் வெள்ளை மாளிகையில் இருந்து இதைச் செய்தால் மட்டுமே இந்த நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். என் வயதில் ஒருவருக்கு இது (துணை ஜனாதிபதி பதவி) ஒரு சிறந்த நிலை. நிச்சயமாக நான் அதை ஏற்பேன்” எனவும் கூறியுள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *