ரஷ்யாவில் தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: நெருப்பு கோளமான விமானம்

ரஷ்யாவில் தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: நெருப்பு கோளமான விமானம்

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 63

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் விமானமொன்று தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 இராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Tupolev Tu-22 போர் விமானமே இவ்வாறு தீக்கிரையானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை தாக்க ரஷ்யாவால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்
ரஷ்ய நேரப்படி சனிக்கிழமை பகல் 10 மணியளவில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்தில் தீவிரவாத செயலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.Soltsy-2 இராணுவ விமான தளமானது உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 400 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

மேலும், Tu-22 போர் விமானமானது சிரியா, செச்சினியா, ஜார்ஜியா மற்றும் மிக சமீபத்தில் உக்ரைனுக்கு எதிராகவும் ரஷ்யாவினால் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply