மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: தென்னிலங்கையில் சம்பவம்

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: தென்னிலங்கையில் சம்பவம்

  • local
  • August 22, 2023
  • No Comment
  • 67

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் தனது மகனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 52 வயதுடைய குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

போதைக்கு அடிமையான நபர்
சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply