உலகத்திற்கு எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகத்திற்கு எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 75

உலக நாடுகள் எதிர்பாராத முக்கியமான ஒரு ஆபத்தை சந்திக்கவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் உலகின் செல்வந்தர்களின் ஒருவருமான எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதுடன், வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது.

உலகின் வெப்பநிலையானது, அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் நாம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

ஐ.நா. வெளியிடப்பட்ட அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா. அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

அத்துடன் கோவிட் போன்ற வைரஸ்கள் காரணமாக உலகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.அண்மையில் கூட கோவிட்டின் புதிய வகை வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் ஆரம்பித்தது.

இந்த நிலையில் உலக நாடுகளுக்கு எதிர்பார்க்காத முக்கியமான ஒரு ஆபத்து ஏற்பட்டு உள்ளது அதன்படி மக்கள்தொகை சரிவுதான் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.ஜப்பான் 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகையில் மிகப்பெரிய மொத்த வீழ்ச்சியைக் கொண்டுள்ளது.

• பிறப்பு விகிதம் தேக்கமடைவதால் அமெரிக்கா நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.

• சீனாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை சரிந்து வருகிறது.

• சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.

மிகப்பெரிய அச்சுறுத்தல்
• பிரித்தானியாவில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

• இத்தாலியின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தது.

• உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கான அவல சாதனையைத் தென் கொரியா மீண்டும் மேற்கொண்டு உள்ளது.

மக்கள் தொகை சரிவு காரணமாக ஏற்படும் இந்த பாதிப்புதான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply