நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு

நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 69

நுவரெலியா – பம்பரக்கலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை
குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நுவரெலியா-பம்பரக்கலையை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (21.08.2023) நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply