வெளிநாடு ஒன்றில் எல்லையோரத்தில் இலங்கையர் குழுவொன்று கைது

வெளிநாடு ஒன்றில் எல்லையோரத்தில் இலங்கையர் குழுவொன்று கைது

இலங்கையர்கள் 7 பேர் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 7 இலங்கையர்களும் நேற்று(16.08.2023) எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையர்கள் கைது
ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜோர்தான் – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலில் பணிபுரிய ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்படாமல் நுழைந்ததாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம்
கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply