பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

  • world
  • August 18, 2023
  • No Comment
  • 61

இந்திய உயர்நீதிமன்றின் புதிய கையேட்டின்படி பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு வேறு வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில வார்த்தைகள் நீதிமன்றங்களின் நடைமுறையில் கூட பயன்பாட்டில் உள்ளன.

இந்தநிலையில் இது போன்ற வார்த்தைகளுக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 40 வார்த்தைகளுக்கு பதில், புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு புத்தகத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.புதிய வார்த்தைகள்
இதன்படி ‘தவறிழைத்த பெண்’, ‘முறை தவறிய பெண்’களை பொதுவான வார்த்தையாக பெண் என்றே குறிப்பிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விபச்சாரி’ என்ற வார்த்தைக்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்றும், கள்ள உறவில் ஈடுபட்ட பெண்’ என்பதை திருமணத்திற்கு வெளியே உடலுறவில் ஈடுபட்ட பெண்’ என்றும், தகாத உறவு’ என்பதை திருமணத்தை மீறிய உறவு என்றும் அழைக்க வேண்டும்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளை கடத்தப்பட்ட குழந்தை என்றும், வல்லுறவை ‘பலாத்காரம்’ என்றும் குறிப்பிடவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பப் பெண் என்ற ஹவுஸ்வொயிப்’ என்பதை ஹோம் மேக்கர்’ என்றும், ‘முதிர்கன்னி’ என்பதை திருமணமாகாதவர்’ என்றும், சோம்பேறி’ என்பதை வேலை இல்லாதவர் என்றும், திருமணமாகாமல் தாயானவரை தாய் என்றே அழைக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகள் அனைத்தும் இந்திய உயர்நீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply