யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண்

யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண்

  • local
  • August 18, 2023
  • No Comment
  • 69

யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு இன்பருட்டி பகுதியில் இடம்பெற்ற நீச்சல்ப் போட்டியில் 56 வயதான பெண் ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இன்று (17.08.2023) இடம்பெற்ற ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டியில், மற்றுமொரு 40 வயது பெண் முதலாமிடத்தையும், 44 வயதுடைய பெண் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.வயோதிப மாதுக்கள் பெரும் பரபரப்பு
வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது. இதன்போதே குறித்த பெண்கள் நீந்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன. பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply