வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 16 வயது பாடசாலை மாணவி! பொலிஸார் தீவிர விசாரணை

வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 16 வயது பாடசாலை மாணவி! பொலிஸார் தீவிர விசாரணை

  • local
  • August 18, 2023
  • No Comment
  • 162

சூரியாரா, செவனகல, இந்துனில்புர பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவியை செவனகல வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே தந்தை இழந்த குறித்த மாணவி தாயாருக்கு நிலையான வருமானம் இல்லாத நிலையில் நெலும்சிறிகமவில் உள்ள சிறிய வீடொன்றில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணை
இந்த மரணம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செவனகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குடும்பத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக குறித்த மாணவி கடும் விரக்தியில் வாழ்ந்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வகுப்பு ஆசிரியையின் விருந்து வைபவமொன்றில் பங்கேற்க முடியாமல் மாணவி மிகுந்த ஏமாற்றத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply