சர்ச்சைக்குரிய மேர்வின் சில்வாவின் கருத்துக்கு சந்திரகுமார் கண்டனம்

சர்ச்சைக்குரிய மேர்வின் சில்வாவின் கருத்துக்கு சந்திரகுமார் கண்டனம்

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 12

மிக மோசமான யுத்தத்தை கடந்து வந்தள்ள நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தலையில் எதுவுமில்லாதவர்கள் போன்று மேர்வின் சில்வா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதும், கவலைக்குரியதுமாகும் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றையதினம் (15.08.2023) கருத்து தெரிவிக்கையில், 

வடக்கில் விகாரைகள் மீதோ அல்லது பிக்குகள் மீதோ கை வைத்தால் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு திரும்புவேன் என மக்கள் மத்தியில் வெறுப்பையும் இனகுரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது தலையில் எதுவும் இல்லாதவர்களின் பேச்சு போன்றே அமைந்துள்ளது.

நிரந்தர அமைதி

இந்த நாட்டில் இன்னும் நிலையான அமைதி நிலாவாமைக்கு ஒவ்வொரு இனத்திற்குள்ளும் மேர்வின் சில்வா போன்றவர்கள் இருப்பதே காரணமாக இருக்கிறது. இவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.

ஒவ்வொரு இனத்திற்குள்ளும் இருக்கின்ற மேர்வின் சில்வா போன்றவர்கள் சமூகத்திலிருந்து அகறப்பட வேண்டியவர்கள்.

வெறுப்பு பேச்சுக்கள், அப்பாவி மக்களிடம் இனவாதத்தை தூண்டிவிடுகின்ற செயற்பாடுகள், இந்த நாட்டை ஒரு போதும் நிரந்தர அமைதியை நோக்கி கொண்டு செல்லாது.

ஆகவே பொது மக்கள் மேர்வின் சில்வா போன்றோரின் கருத்துக்களுக்கு இடம்கொடுக்காது நிதானமாக சிந்தித்து நாட்டை நிலையான அமைதிக்கும் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டும்.

மேலும் அனைத்து இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கமும், சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *