பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 72

வருடாந்தம் சுமார் 1400 பஸ்கள் விபத்திற்குள்ளாவதால், நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

அவ்வாறு விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து, மீண்டும் சேவையில் இணைக்க சுமார் 465 மில்லியன் ரூபா செலவாவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், நியூஸ்ஃபெஸ்ட்டிடம் தெரிவித்தார். 

மேலும், விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து, அவற்றை சேவையில் மீண்டும் இணைக்க காலம் எடுப்பதால், 
இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக  லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். 

இவ்வாறான விபத்துகளை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply