2,518 பேருக்கு நியமனம் வழங்க இணக்கம்

2,518 பேருக்கு நியமனம் வழங்க இணக்கம்

  • local
  • October 13, 2023
  • No Comment
  • 12

கடந்த 2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதனை ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக முதற்கட்டமாக 1,000 தாதியர் பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, சகல தாதியர் பயிற்சியாளர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply