25 வயது இளைஞனை பத்து மாதங்களாக காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

25 வயது இளைஞனை பத்து மாதங்களாக காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 22

மினுவாங்கொடை, கலஹுகொட பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்பு இலக்கம்
குறித்த இளைஞனின் பெயர் காளிங்க ரமேஸ் சதுரங்க பெரேரா எனவும் இவரது உயரம் 5 அடி 5 அங்குலம் எனவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031- 2295223 என்ற இலக்கத்தின் ஊடாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply