2025 ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வரும் டென்மார்க் அஞ்சல் சேவை

2025 ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வரும் டென்மார்க் அஞ்சல் சேவை

  • world
  • December 31, 2025
  • No Comment
  • 24

டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து டென்மார்க்கில் கடிதங்களின் பயன்பாடு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது.

டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில், பாரம்பரிய அஞ்சல் கடிதங்களின் தேவை குறைந்தமையே இதற்கு காரணமாகும்

கடிதங்களின் எண்ணிக்கை குறைந்ததால், நாடு முழுவதும் இந்த சேவையைத் தொடர்வது நிதி ரீதியாக நட்டத்தை (ஆண்டுக்கு சுமார் 57 மில்லியன் யூரோக்கள்) ஏற்படுத்துவதாக PostNord தெரிவித்துள்ளது.டென்மார்க் உலகின் மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். அரசு ஆவணங்கள், வங்கி விபரங்கள் மற்றும் மருத்துவத் தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே ஆன்லைன் மூலமே பரிமாறப்படுகின்றன.

இதனால் டென்மார்க் முழுவதும் உள்ள சுமார் 1,500 புகழ்பெற்ற சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்படவுள்ளன. இதில் சில பெட்டிகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

இந்த மாற்றம் பெரும்பாலான மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இணையத்தைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் அஞ்சப்படுகிறது. அவர்களுக்காக மாற்று வழிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…