“மிகச்சிறந்த   டெஸ்ட் கேப்டன் “- கோலி தொடர்பான அஸ்வினின் கருத்து

“மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் “- கோலி தொடர்பான அஸ்வினின் கருத்து

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி மே 12-ம் தேதி அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோலியின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார்.

“இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலிதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஏற்படுத்தியிருக்கும் லெகஸியை யார் நிரப்ப போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கப்போகிறது.

விராட் கோலிக்கு கிரீடம் சூட்டவேண்டுமா?  என்ற கேள்வியே எழுப்பக்கூடாது. அவர் அனைத்திற்கும் தகுதியானவர்.  என்னை பொறுத்தவரை கோலி இன்னும் இரண்டு வருடங்கள் விளையாடியிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…