பில்லி, சூனியம் என்றால் என்ன? – ஏவல், செய்வினை, கண்திருஷ்டி பாதிக்காமல் தப்பிப்பது எப்படி?
- Spirituality
- September 14, 2023
- No Comment
- 28
மந்திரம் என்ற சொல் மிகவும் பழமையானது. உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது.
சிலர் துர் மந்திரங்களால் தீய காரியங்களை மாந்திரீகம் என்ற பெயரில் செய்து வருகின்றனர். மாந்திரீகம் என்றால் என்ன அதன் பாதிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதைப் பார்ப்போம்.
இந்தியாவில் வேதங்கள், குறிப்பாக அதர்வ வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், மந்திரங்களை பிராமணர்கள் கற்றுக் கொண்டு, பயிற்சி செய்து நல்ல சக்தியை பரப்பும் வகையிலான ஒலிகள் அடங்கியதாக அந்த மந்திரங்கள் விளங்குவதாக அதற்கான விளக்கங்களை கூறுகின்றனர்.
அமானுஷ்ய சக்திகள்
சில துர் சக்தி, அமானுஷ்ய சக்திகள் உள்ளதாகவும், அவற்றை அழைக்கவும் சில மந்திரங்களை பயன்படுத்தப்படுவதாக சில வரலாற்றுக் குறிப்பும் உள்ளன.
சூனியம் என்பது பாரம்பரியமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது மந்திரம் தீய மற்றும் சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பழைய பிரெஞ்சுக்காரர்கள் அதிகம் பின்பற்றியதாகவும், 1526ல் தான் இந்த முறை பிரபலமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
பில்லி, சூனியம் எப்படி செயல்படுகிறது ?
ஜோதிடத்தில் நம் மனதை கட்டுப்படுத்தக்கூடிய, மனோகாரகன் சந்திரன் என குறிப்பிடப்படுகிறது. சந்திரன் பலமிழந்த நிலையில் தான், ஒருவருக்கு வசியம், மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் செய்ய முடியும். அதனால் தான் இது போன்ற தீய விஷயங்கள் சந்திரன் முழுவதும் வலுவிழந்த அமாவாசை நாளில் செய்யப்படுகிறது.
பில்லி என்றால் என்ன?
மாந்திரீகம் என்றால் நம் நினைவுக்கு வருவது பில்லி என்ற சொல் தான். ஒருவரின் மனதையும், சிந்தனையையும் குழப்பி, அவரின் செயலை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பில்லி எனப்படும்
மனோவசியம் என்றால் என்ன?
ஒருவரை பேசியே மயக்கும் மாந்திரீக முறைக்கும் மனோவசியம் என்று பெயர். இண்டர்நெட், தொலைப்பேசி மூலம் பேசி கூட ஒருவரை மனோவசியம் செய்ய முடியும் என்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர்.
செய்வினை என்றால் என்ன?
மிகவும் கொடூரமான மாந்திரீக முறை என்றால் அது செய்வினை. ஒருவரை பிடிக்க வில்லை என்றால் அவர் எல்லா வழிகளிலும் கெட்டு, அழிந்து போக செய்யப்படுவது இந்த செய்வினை.
ஏவல் என்றால் என்ன?
ஒருவர் விரும்பாத செயலை அவரையே செய்யத் தூண்டுவது தான் ஏவல். மாந்திரீகமாக புஜை செய்யப்பட்ட பொருளை அந்த நபருக்கு கொடுத்து இந்த ஏவல் முறை செய்யப்படுகிறது.
வசியம் என்றால் என்ன?
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர செய்யப்படுவதே வசியம். இந்த வசிய முறையில் தான் அதிகளைல் ஏமாற்று வேலை நடக்கின்றது.
வைப்பு என்றால் என்ன?
மந்திரிக்கப்பட்ட ஒரு பொருளை தனக்கு பிடிக்காத ஒரு நபரின் இடத்தில் வைத்து அவரை அழிக்க நினைப்பதற்கு வைப்பு எனப்படுகிறது.
இப்படி ஒருவரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், அவரின் விருப்பப்படி ஆட்டுவிப்பது தான் பில்லி, ஏவல், சூனியம் போன்ற மாந்திரீக விஷயங்கள். இதுகுறித்து தற்போது பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் காட்சி அமைக்கப்பட்டும் வருகின்றன.
ஒரு மனிதனை வீழ்த்துவதற்காக, அழிப்பதற்காக அவரின் முடி, காலடி மண், ஆடை, அணிகலன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சூனியம் வைக்கப்படுகிறது.
யாரை எல்லாம் மாந்திரீகம் பாதிக்காது :
யார் ஒருவர் அடிக்கடி முறையாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்கிறாரோ, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு, காமாஷி வழிபாடு செய்து வருகிறாரோ அவருக்கு எந்த ஒரு மாந்திரீக சக்தியும் எதுவும் செய்ய முடியாது.
காயத்ரி மந்திரம் தினமும் உச்சரிப்பவருக்கு,, யோகா, தியானம் செய்பவர்களுக்கு ரத்த சொந்தம் இல்லாத மற்ற இடங்களில் சாப்பிடாதவர்களை வசியப்படுத்த முடியாது.
யார் ஒருவர் இறைவழிபாடும், மனதை ஒருநிலைப்படுத்தக்கூடியவராக இருப்பவரை மனோவசியம் செய்ய முடியாது.
ஜாதகத்தில் குரு ஆதிக்கம் நிறைந்தவரிடமும், வேதம் ஓதுபவர்களிடமும் மாந்திரீகம் பலன் அளிக்காது. இவர்களை மாந்திரீகத்தால் வசியப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
- Tags
- spirituality