நாட்டின் பல பகுதிகளில் 100மில்லிமீட்டர்க்கு அதிகமான கன மழை பெய்யும் வாய்ப்பு
- local
- May 30, 2025
- No Comment
- 36
மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் தெரிவித்தது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் காற்று வீச்க்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.