தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் துமிந்த திசாநாயக்க கைது
- local
- May 23, 2025
- No Comment
- 39
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 2 பெண்களும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் சென்ற 40 வயதுடைய பெண்ணை அவதானித்த பாதுகாப்பு அதிகாரி நடத்திய சோதனையின் போது துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து துப்பாக்கியை வைத்திருந்த 40 வயதுடைய பெண்ணும் தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 68 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக கைதான இரண்டு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கி அநுராதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்தநிலையில், இன்று பம்பலபிட்டி பகுதியில் வைத்து துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.