ஜப்பானை தாக்கும் கானுன் சூறாவளி-விமானப் பயணங்கள் இடைநிறுத்தம்

ஜப்பானை தாக்கும் கானுன் சூறாவளி-விமானப் பயணங்கள் இடைநிறுத்தம்

கானுன் சூறாவளி,  ஜப்பானின் தென்மேற்கு பகுதியான ஒக்கினவா மாகாணத்தை நெருங்கியுள்ளது.

இதில், ஒருவர் பலியாகி இருக்கும் நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.ஒக்கினவாவில் உள்ள சில இடங்களில் நேற்று காலை, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று வீசியதோடு, கடந்த 24 மணி நேரத்தில் 250 மில்லிமீட்டர் மழை பெய்ததாக ஜப்பானிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியேற்றம்

சூறாவளி வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதால், சுற்றுலாவிற்குப் புகழ் பெற்ற அம்மாகாணத்தில் உள்ள 7 இலட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதேவேளையில், அப்பகுதியிலுள்ள வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நாஹவில் விமான நிலையம் நேற்று(02.08.2023)இரண்டாவது நாளாகவும் முழுமையாக மூடப்பட்ட நிலையில் சுமார் 951 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply