கார் விபத்தில் குரோஷியாவின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் பலி
- world
- April 19, 2025
- No Comment
- 61
குரோஷியாவின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் போக்ரிவாக் கார் விபத்தில் உயிரிழந்தார்.
கார் விபத்தில் சிக்குண்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 39 வயதான இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.