இலங்கை வந்தார் சச்சின் டெண்டுல்கர்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 111

பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறார்களை சந்திக்கும் கண்காணிப்பு பயணத்தில் இணைந்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் விசேட அழைப்பின் பேரில், சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ளார்.

ஊட்டச்சத்து திட்ட நடைமுறை

யுனிசெஃப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கரின் மேற்பார்வையின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான யுனிசெப்பின் குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திஸாநாயக்கவுடன் ருவன்வெல்ல பல்லேக்னுகல கனிஷ்ட கல்லூரிக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் எவ்வாறு கற்கைகள் இடம்பெறுகின்றன என்பதை அவதானித்தார்.

பின்னர், கல்லூரி மைதானத்துக்குச் சென்று கிரிக்கெட் விளையாடினார்.

மேலும் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.ருவன்வெல்ல, கோனகல பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிக்கு சென்று சிறுமிகளின் நடத்தைகளை ஆராய்ந்து பின்னர் அவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply