இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்
- local
- June 2, 2025
- No Comment
- 57
இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடுமையான காற்று வீசும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் காற்று தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை 117 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அறிந்து கொள்ளவோ அல்லது முறையிடவோ முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது