அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2 சதவீதம் வீழ்ச்சி
- Finance
- April 20, 2025
- No Comment
- 79
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் உத்தியோகபூர்வ கையிருப்பு தொகை மாற்றமின்றி பேணப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வசமுள்ள பிணைமுறி பத்திரங்களின் பெறுமதி முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் 2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.