வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

  • Sports
  • May 23, 2025
  • No Comment
  • 38

நடப்பு ஐ.பி.எல் சீசனில்குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து சேஸிங் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவித்ததால், 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிபெற்றது.

சதமடித்த மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

தோல்விக்குப் பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், “15 – 20 ரன்களை நாங்கள் அதிகமாகக் கொடுத்துவிட்டோம். அவர்களை 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம்.

210-க்கும் 230-க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பவர்பிளேயில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். விக்கெட்டுகள்தான் எடுக்கவில்லை.

ஆனால், அடுத்த 14 ஒவர்களில் அவர்கள் 180 ரன்கள் எடுத்தனர். அது அதிகம்தான்.

சேஸிங்கில் 17-வது ஓவர் வரை நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம். இருப்பினும், 240 ரன்களை சேஸ் செய்வது ஒருபோதும் சுலபமல்ல.

இருப்பினும் எங்களுக்கு நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறது. ரூதர்ஃபோர்ட் – ஷாருக்கான் பேட்டிங் எங்களுக்கு பெரிய ப்ளஸ்.

மீண்டும் கொஞ்சம் வேகமெடுப்பது முக்கியம். பிளேஆஃப்-க்குள் வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…