புரட்டாசி மாதத்தில் சுப காரியங்களை ஏன் தவிர்க்க வேண்டும்?

புரட்டாசி மாதத்தில் சுப காரியங்களை ஏன் தவிர்க்க வேண்டும்?

இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா, வீடு கட்ட ஆரம்பித்தல், கிரகப்பிரவேசம் செய்யலாமா?, வளைகாப்பு நடத்தலாமா? நடத்தக்கூடாதா என்ற பல கேள்விகள் நம் மனதில் ஏற்படும். ஆம் புரட்டாசியில் முக்கிய சுப காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் செய்ய சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்கள் மிகவும் உகந்தது என ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியத்துடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதே போல ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்யக்கூடாது. வைகாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் எந்த சுபகாரியங்களையும் செய்யலாம். கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மாதம் ஒற்றைப்படை மாதமாக அமையும் பட்சத்தில் வளைகாப்பு நடத்த எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

பொதுவாக நாம் நாட்காட்டியில் வாஸ்து நாள் என்று பார்த்திருப்போம். அதில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய 4 தமிழ் மாதங்களில் மட்டும் வாஸ்து நாள் என்று குறிப்பிடப்பட்டிருக்காது. அதனால் இந்த நான்கு மாதங்களில் பொதுவாக வீடு கிருகப்பிரவேசம், வாஸ்து பூஜை செய்யப்படுவதில்லை.

வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது. வீடு கட்ட தொடங்கி பணி நடந்து கொண்டிருந்தால், இந்த மாதத்தில் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. மேலும் புரட்டாசி மாதம் இறைவழிபாட்டுக்கு மட்டுமில்லாமல் முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கும் மிகவும் உகந்தது.

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை முன்னோர்களை வழிபட மிக முக்கியமான நாளாகும். அதுமட்டுமில்லாமல் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயபட்ச காலம் (15 நாட்கள்) விரதம், மகாளய அமாவாசை விரதம் மிகவும் விஷேசமானது. இந்த காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உரியது.

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்துவதை முன்னோர்கள் தவிர்த்து விட்டனர். ஆனால் புரட்டாசியில் வளைகாப்பு நடத்தலாம்.

Related post

Leave a Reply