நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • local
  • August 3, 2023
  • No Comment
  • 32

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில்  சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

600க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள்

 

 

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

“கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம்.

600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

கடுமையான தீர்மானம்

போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம்.

ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் எனஅரசாங்கம்உறுதியளித்தது.இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம். எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply