செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

  • local
  • July 1, 2025
  • No Comment
  • 93

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களைக் குணப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அகழ்வு பணிகள் நிறைவடையும் வரையில், இந்த விடயத்தில் இறுதி முடிவுக்கு வர முடியாது.
தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் ஆடை அல்லது அதிலிருந்த இலக்க தகடு ஏதாவது மீட்கப்படலாம்.

இதன்போது, விசாரணைகள் வேறு பக்கம் திரும்பும், இந்தநிலையில், இன்னும் 15 நாட்களுக்கு அங்கு கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அந்த 15 நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் இறுதி முடிவுக்கு வரமுடியும் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த இடம் யுத்தம் நிலவிய பிரதேசமாகும். அங்கு, சகல பக்கங்களிலிருந்தும் துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் யாருடைய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள்? என்பது மட்டுமே தற்போது தெரியாமல் உள்ளது. எனவே, உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயமாகும்.
மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களைக் குணப்படுத்த வேண்டும்.

இருப்பினும், இதயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, மீண்டும் வெறுப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக இலங்கைக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை.

சர்வதேச சக்திகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இலங்கையின் இனங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையே உள்ளது. அவர்களின் தனிப்பட்ட அரசியலுக்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…