ஏழு புதிய நாடுகளுக்கு தடை உத்தரவு – டொனால்ட் ட்ரம்ப்
- world
- January 1, 2026
- No Comment
- 30
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏழு புதிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது 2026ஆம் ஆண்டில் அமுலுக்கு வருகிறது.
அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நோக்கம் கொண்ட வெளிநாட்டவரை தடை செய்து நாட்டை பாதுகாப்பதை நோக்காக கொண்டு , கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் இக்கருத்து தெரிவிக்கப்பட்ட்து .
இந்த நடவடிக்கையின் மூலம், தங்கள் குடியுரிமையின் காரணமாக மட்டுமே அமெரிக்காவிற்கு வருவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ஏழு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான பயணத்தடை, 2026ஆம் ஆண்டு தொடங்கும்போது நடைமுறைக்கு வருகிறது.
இதன்மூலம் புர்கினா பாசோ, லாவோஸ், மாலி, நைஜர், சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் மற்றும் குடியேறாதவர்கள் அனைவருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.