உடல் எடையை குறைக்க உதவும் சில ஜூஸூகள்

  • healthy
  • September 5, 2023
  • No Comment
  • 19

உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் உள்ளனர். உணவுக் கட்டுப்பாடு எளிதானது அல்ல பொதுவாக ஒவ்வொரு நாளும் ஜிம்மிற்குச் செல்ல நேரம் கிடைப்பதில்லை.

இத்தகைய சூழ்நிலையில் சில காய்கறிகள் உள்ளன அவற்றின் ஜூஸூகளை குடிப்பதன் மூலம் எடை குறைக்க முடியும். இந்த காய்கறிகளின் சாறு குடிப்பது கொழுப்பை எரிக்க உதவும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் சாற்றை உணவில் எளிதில் சேர்த்துக் கொள்ளலாம், அதன் சாறு குடிப்பதும் எடையைக் குறைப்பதில் சிறந்த விளைவைக் காட்டுகிறது.

இந்த ஜூஸில் நல்ல அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை எடையைக் குறைக்கும்.

அத்துடன் புரதசத்து, நீர்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புசத்து உள்ளிட்டவை உள்ளன.

எனவே உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னதாக பீட்ரூட் ஜூஸை குடித்தால் அவர்களது உடலில் ரத்த ஓட்டம் மேலும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது தசைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக சென்று ஸ்டாமினை வலுவாக்க உதவுகிறது.

கீரைச்சாறு

கீரை பச்சை இலை காய்கறிகளில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கீரையில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளது.

தொப்பையை குறைக்க கீரை சாறு தினமும் குடித்து வரலாம். இதனால் செரிமானமும் மேம்படும்.

இந்த ஜூஸில் உள்ள செர்லி மற்றும் பார்ஸ்லி கலவை, உயிரை பறிக்கும் வகையிலான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவல்ல அபிஜெனினை நம் உடலுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரட் ஜூஸ்

எடை இழப்பு சாறுகளின் எண்ணிக்கையில் கேரட்டின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. நார்ச்சத்து நிறைந்த குறைந்த கலோரி வேர் காய்கறி இதுவாகும்.

இது செரிமானத்தை மேம்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது. கேரட் ஜூஸ் பித்த சுரப்பை அதிகரிக்கும்.

இது அதிக கலோரிகளை கரைக்கச் செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது.

முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி. இதனை உட்கொள்வதால் வாய்வு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை குணப்படுத்த முடியும்.

முட்டைக்கோஸ் சாறு தயாரித்து உட்கொண்டால் எடையைக் குறைக்கலாம்.

இந்த ஜூஸை குடித்த பிறகு நீண்ட நேரம் வயிறு நிரம்பியவாரே இருக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் உடலில் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ரால் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

Related post

Leave a Reply