உக்ரைன், ரஷ்ய இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம்
- world
- January 2, 2026
- No Comment
- 23
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது புத்தாண்டு உரையில் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 10 சதவீத இணக்கப்பாடே உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று குறிப்பிட்ட அவர், உக்ரைனின் அழிவின் மூலம் கிடைக்கும் அமைதியைத் தாம் விரும்பவில்லை என்றும், நாட்டின் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் உறுதியாகக் கூறினார்.
இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் இல்லத்தை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தையைத் திசைதிருப்பவே ரஷ்யா இத்தகைய பொய்களைப் பரப்புவதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளன.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்யாவுடனான தனது நாட்டின் கூட்டணி அசைக்க முடியாதது எனப் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 6-ஆம் திகதி பாரிஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடுகளின் கூட்டம், அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.