அம்பலாங்கொடை முகாமையாளர் கொலை தொடர்பான அடுத்தகட்ட விசாரணை CID-யிடம் ஒப்படைப்பு

அம்பலாங்கொடை முகாமையாளர் கொலை தொடர்பான அடுத்தகட்ட விசாரணை CID-யிடம் ஒப்படைப்பு

  • local
  • December 30, 2025
  • No Comment
  • 27

அம்பலாங்கொடை வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 09 சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது .

குறித்த வீட்டின் கூரையைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தம் சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் ஒப்பந்ததாரருடன் பல தடவைகள் குறித்த வீட்டிற்கு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பின்னரும் சந்தேகநபர்கள் அம்பிட்டியவிலுள்ள குறித்த வீட்டிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…