அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
- local
- April 20, 2025
- No Comment
- 52
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளின் தரவுகள் உள்ளிட்ட ஏனைய விபரங்களைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, அதிகாரிகளின் தரவுகள் மற்றும் வாகன விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் சில நிறுவனங்களிடமிருந்து குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.