சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

  • world
  • January 10, 2026
  • No Comment
  • 15

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
.
“ரஷ்ய ஜனாதிபதி புதினை பிடிப்பதற்கு அவசியமிருக்காது. அது தேவைப்படாது என்று நினைக்கிறேன். அவருடன் நான் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டுள்ளேன்.இருப்பினும், எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. நான் 8 போர்களைத் தீர்த்து வைத்துள்ளேன். இது எளிதான போர்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடந்த மாதம், 31,000 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் ரஷ்ய வீரர்கள்; மேலும், ரஷிய பொருளாதாரமும் மோசமாகி உள்ளது” என்று கூறினார்.

வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபரை அமெரிக்கா கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து, சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மறைமுகமாக புதின் குறித்துப் பேசினார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும்  அவரது மனைவி கைது

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி மீது நியூயோர்க்கின் தெற்கு…