கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

  • local
  • May 13, 2025
  • No Comment
  • 65

 கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட 19 பேருக்காக தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

 

பொலிஸார், இலங்கை பேக்குவரத்து சபை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பஸ்ஸில் எவ்வித இயந்திரக் கோளாறும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 

இதனிடையே ​கொத்மலை பஸ் விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குழுவில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ருவண் குணசேகர, பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல மற்றும் பொறியியலாளர் கே.கே.காஹிங்கல ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…