சீனாவில்  இளைஞர்கள் இடையே வேலையில்லா பிரச்சனை எழுந்துள்ளது-வெளியான அதிர்ச்சி தகவல்…

சீனாவில் இளைஞர்கள் இடையே வேலையில்லா பிரச்சனை எழுந்துள்ளது-வெளியான அதிர்ச்சி தகவல்…

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 15

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்கள் இடையே வேலையில்லா பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 

அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசாங்கத்தினால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் காணப்படுகின்றது.

சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா பிரச்சனை உலகளாவிய விநியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே, சீனா சரியான முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply