நா.சந்திரசேகருக்கு ஈழத் தமிழர் சார்பில் அஞ்சலி: சபா குகதாஸ்

நா.சந்திரசேகருக்கு ஈழத் தமிழர் சார்பில் அஞ்சலி: சபா குகதாஸ்

  • world
  • August 16, 2023
  • No Comment
  • 11

நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த நா.சந்திரசேகர், விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் நேற்று முன்தினம் (14.08.2023) இயற்கை எய்தியுள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபா குகதாஸ் இன்று (16.08.2023) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியத் தமிழகத்தில் தடா சட்டம் திரும்பிய போது அதனை எதிர்த்து சிரேஷ்ட வழக்கறிஞராக நீதிமன்றில் தொடர்ச்சியாக வாதாடி வந்தவர். அதனால் தான் தடா சந்திரசேகர் என அழைக்கப்பட்டார்.

கடந்த காலத்தில் ஈழ விடுதலை தொடர்பான மிக உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் புலம்பெயர் தேசங்களில் சென்று பொது மேடைகளில் பகிர்ந்து கொண்டவர்.

மிகவும் தீவிரமாக ஈழத் தமிழர்களையும் அவர்களது விடுதலையையும் நேசித்தவர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக மிகப் பெரும் பணிகளை ஆற்றி வந்தவர் அன்னாரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சந்திரசேகருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் இதய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *