இலங்கை சுற்றுலா துறையில் முன்னேற்றம்:இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சி

இலங்கை சுற்றுலா துறையில் முன்னேற்றம்:இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சி

  • local
  • September 15, 2023
  • No Comment
  • 56

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் யாழ்ப்பாணத்திற்கு 6000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 

இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும், கொர்டேலியா குரூஸ் சுற்றுலா கப்பல் சேவை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து யாழிற்கு வந்த சுற்றுலா பயணிகள் இவ்வாறு அதிகரித்துள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி தொடக்க வருகையிலிருந்து அடுத்தடுத்த ஒன்பது பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கியுள்ளனர்.

கலாசார பிணைப்புகள்

அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் கோவில்களின் அற்புதமான அனுபவத்தை சுற்றுலாப் பயணிகள் பெற்றுள்ளனர்.

வட மாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் உதவியுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகமும் வலி வடக்கு பிரதேச சபையும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் வடமாகாண ஆளுநர் முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளார்.

இந்த மேம்படுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகத்திற்கும் உதவியது மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வழிகளை வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply