ஆலய திருவிழாக்களில் தங்க ஆபரணங்கள் திருட்டு: பெண்கள் உட்பட 9 பேர் கைது

ஆலய திருவிழாக்களில் தங்க ஆபரணங்கள் திருட்டு: பெண்கள் உட்பட 9 பேர் கைது

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 16

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் தேவாலயம் உட்பட இரு வெவ்வேறு இடங்களில் தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் 4 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3¼ பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட ட குற்றச்சாட்டிலே நேற்றையதினம் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலய திருவிழாவில் பங்குகொள்ள வந்த பெண் ஒருவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான பெண்கள் தங்க ஆபரணத்தை அறுத்து செல்ல முற்றபட்டபோது அங்கிருந்த மக்கள் குறித்த குழுவினரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.உறவினர்களின் செயல்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட , 27, 33 வயதுடையவர்கள் எனவும் மூன்று பேரும் உறவினர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு தெரிவித்துள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply