தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இலங்கை எதிர்நோக்கவுள்ள ஆபத்து

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இலங்கை எதிர்நோக்கவுள்ள ஆபத்து

ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பாவையும் கிழக்கையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் கப்பல்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் சர்வதேச காப்புறுதி நிறுவனங்கள் விசேட இடர் கட்டணத்தை விதித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காப்புறுதி நிறுவனங்கள்
சில காப்புறுதி நிறுவனங்கள் இடர் காப்புறுதி விகிதங்களை வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கையிலுள்ள முக்கிய சர்வதேச வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூயஸ் கால்வாய் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், சூயஸ் கால்வாய் ஊடாக செல்லும் கப்பல்களின் கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் வாகனங்களுக்கு 15 சதவீத கட்டணமும், ஏனைய சரக்கு கப்பல்களுக்கு 5 சதவீத கட்டணமும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணங்கள் அதிகரிப்பு
இது தவிர, காப்பீட்டு நிறுவனங்கள் இடர் கட்டணங்களை அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், போர் தீவிரமடையும் பட்சத்தில், சூயஸ் கால்வாய் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டு இஸ்ரேலிய வான்வெளி மூடப்படலாம் என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்நிலையில், ஆசிய நாடுகளில் இறக்குமதி பொருட்களின் விலை மேலும் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…

Leave a Reply