யாழ்ப்பாணம்-தமிழகத்திற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பம்

யாழ்ப்பாணம்-தமிழகத்திற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பம்

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 48

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.முன்னதாக காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.

எனினும் தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் என்ற அடிப்படையில் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அலுவலகம் அமைக்கும் பணிகள்
இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்திற்கான தூரம் 110 கிலோமீட்டர்களாகும்.எனவே நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலில் சென்றால் வெறும் 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை அடைந்துவிடலாம் என கூறப்படுகிறது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply