பிரித்தானியாவில் மீண்டும் புதுவகை கோவிட் வைரஸ்

பிரித்தானியாவில் மீண்டும் புதுவகை கோவிட் வைரஸ்

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 68

கோவிட் வைரஸ் மாறுபாடு உலகில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் திரிபானது பிரித்தானியாவிலும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய கோவிட் வைரஸினுடைய மாறுபாடானது BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது.எனினும் புதிய வைரஸின் தாக்கம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நான்கு முக்கிய அறிகுறி
மேலும், இந்த வைரஸானது தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தை தாண்டி தொற்றை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒமிக்ரோன் வைரஸ் மிதமானது என்று கூறப்பட்ட போதிலும் அது ஏராளமான உயிர்களை பலிகொண்டது.

தற்போது இந்த பிரோலா வைரஸ் தொடர்பில் நான்கு முக்கிய அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் மருத்துவர்கள், அந்த அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

அதிக காய்ச்சல்,இருமல்,ஜலதோஷம்,சுவை மற்றும் வாசனை இழப்பு.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply