காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 53

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல்போன 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன் தினம் (02 .08.2023) வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் தங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் தீவிர விசாரணை

கடந்த 31 ஆம் திகதி தந்தையுடன் பாடசாலைக்கு சென்ற சிறுமி, அன்று காலை காணாமல்போனதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணையை முன்னெடுத்திருந்த பொலிஸார் சிறுமியின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாடசாலை சீருடை என்பனவற்றினை குருநாகல் பேருந்து தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து மீட்டிருந்தனர்.இதற்கமைய, தொடர்ந்தும் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து சிறுமியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply