James Anderson: “இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை”- 41 வயதை நெருங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

James Anderson: “இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை”- 41 வயதை நெருங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 93

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு குறித்துப் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுமாகியிருக்கிறார்.

டெஸ்ட் , ஒருநாள், சர்வதேச டி20  போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவர் இதுவரை 976 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதோடு 182 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி 689 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.  தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடி வருகிறார். இந்த ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் ஆடி வெறும் 4 விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார்.

 

Anderson

இதனால் கடைசி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வரும் ஜூலை 30 ஆம் தேதி  41 வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ இப்போதைக்கு ஓய்வு பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. இந்த ஆஷஸ் தொடரில் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எல்லா வீரர்களும்  இதுமாதிரியான ஒரு சூழலை தங்களது கெரியரில் சந்திப்பார்கள்.

ஆனால் இது போன்ற பெரிய தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது சற்று ஏமாற்றம்தான். பயிற்சியாளர் மெக்கல்லனுடனும், கேப்டன் பென் ஸ்டோக்சுடனும் பேசினேன்.

அவர்கள் நான் அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நானும் என்னுடைய சிறப்பான ஆட் டத்தை  வெளிப்படுத்த வேண்டும் என்று விருப்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.  

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply